
புதுடில்லி: வருமான வரி செலுத்துவோர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீ்டித்துள்ளது.நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. மொபைல் மூலம் குறுந்தகவல் மூலமும் இணைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.இந்த காலக்கெடு இன்று முடிவடைய உள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோர் தங்களது பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments