
சென்னை: நாளை (ஆக.,27) காலை 10.30 மணிக்கு சந்திக்க தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு கவர்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து கவர்னரை சந்திக்க திமுக வினர் நேரம் கேட்டிருந்தனர். இதனையடுத்து இந்த சந்திப்பு நாளை நடக்கிறது. கவர்னரை துரைமுருகன், தலைமையில்,கனிமொழி எம்.பி., ஜே. அன்பழகன், ஆர்.எஸ். பாரதி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர்.
ஸ்டாலின் பேட்டி
முன்னதாக திருவாரூரில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூறியதால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. கவர்னர் வித்யாசாகர் ராவ் ஜனநாயகத்தை காப்பார் என நம்பிக்கை உள்ளது. கவர்னர் தாமதப்படுத்துவதால் குதிரை பேரம் நடைபெறும். பெரும்பான்மை நிரூபித்து ஆட்சி நீடித்தால் கவலையில்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Comments