நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது ரூ.200 நோட்டு

ரூ.200, Rs.200, ரிசர்வ் வங்கி, Reserve Bank,புதுடில்லி,New Delhi,  மகாத்மா காந்தி , Mahatma Gandhi, சாஞ்சி ஸ்தூபி , Sanchi Stupa, தேவநாகிரி , Devanagari,புதுடில்லி: புதிய ரூ. 200 நோட்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான மாதிரி தாள்களையும் வெளியிட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த நோட்டில், ஒரு புறத்தில் மகாத்மா காந்தி படமும் அதன் அருகில் தேவநாகிரி எழுத்தில் ரூ.200 என பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் சாஞ்சி ஸ்தூபி இடம்பெற்றுள்ளது. பார்வையற்றோர் இந்த நோட்டை தொட்டு, மதிப்பை உணரும் வகையில் ரூ.200 நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால், சில்லரை பிரச்னை தீர்க்கும் வகையில் இந்த நோட்டுகள் வெளியிடப்படுகின்றன. இந்த நோட்டு வெளியிடுவதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.

Comments