இந்த புதிய ரூ.200 நோட்டுக்கள் ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ புழக்கத்திற்கு வரலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.100 க்கும் ரூ.500 க்கும் இடையே எந்த ரூபாய் நோட்டும் இல்லை. இதனால் சில்லரை பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும், இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.200 நோட்டில் கள்ள நோட்டுக்கள் வருவதை தடுக்கவும், கள்ளச்சந்தையில் அவைகள் பதுக்கப்படுவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பண பரிவர்த்தனையை எளிமையாக்குவதற்கும், குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதற்காகவும் ரூ.200 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Comments