2ஜி வழக்கில் தீர்ப்பு எப்போது? செப்.,20ல் கோர்ட் அறிவிப்பு

2ஜி வழக்கு, ராஜா, கனிமொழி, தீர்ப்பு, ஷைனிபுதுடில்லி: 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் வரும் செப்டம்பர் 20ல் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு:

காங்., தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்கு களையும், அமலாக்கத் துறைதொடர்ந்த ஒரு வழக்கையும், நீதிபதி, ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி, சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா,அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி., கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது. 

குற்றப்பத்திரிகை:

மேலும், ராஜாவின் முன்னாள் தனிச்செயலர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யுனிடெக் கட்டுமான நிறுவன தலைவர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானி தலைமையிலான, ஆர்.ஏ.டி.ஏ.ஜி., நிறுவனத்தின் மூன்று மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில், ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப் பட்டனர். இவர்களுக்கு எதிராக, 2011ல், சி.பி.ஐ., முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. 

தீர்ப்பு:

இந்த வழக்கில் செப்டம்பர் 20ல் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார். மேலும் அவர் செப்.,20ல் இருந்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம். தீர்ப்பு தயார் செய்வதற்கு இன்னும் அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Comments