அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் 19 பேரும் புதுவையில் தங்கியுள்ளனர். மேலும் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று இந்த அணியினர் கோரி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கட்சி தலைமைக்கு எதிராக 19 பேரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது.
எனவே கட்சிக்கு எதிராக செயல்பட்ட 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளையும் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளேன் என்றார் அவர்.
Comments