பலாத்கார வழக்கில் அரியானா சாமியாருக்கு 10 ஆண்டு சிறை

அரியானா, சாமியார், 10 ஆண்டு, சிறை ,சண்டிகார்: ; அரியானாவில் உள்ள தேரா சச்சா சவுத்தா அமைப்பின் தலைவரான சாமியார் ராம்ரஹீமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்தது. 

அரியானா , பஞ்சாப் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றவர் ராம்ரஹீம்.இவர் இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என, சி.பி.ஐ., சிறப்பு கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, வன்முறை கோர தாண்டவமாடியது. இதில் 36 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

இவருக்கான தண்டனையை சி.பி.ஐ.,சிறப்பு நீதிபதி இன்று அறிவித்தார். சாமியாரை கோர்ட்டுக்கு அழைத்து வந்தால் பதட்டம் ஏற்படும் என்பதால் நீதிபதி , ரோதக்கில் உள்ள சிறைக்கு சென்று தீர்ப்பை அறிவித்தார். தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது சாமியார் கண்ணீர் விட்டு அழுதார்.

Comments