கைது?
திலீப் கைது விவகாரத்தில் பாதித்த நடிகையின் பெயரை, பகிரங்கமாக கூறியதற்காக, கமலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனியார் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், கலாச்சாரத்தை சீரழிப்பதாக அடுக்கடுக்கான புகார் எழுந்துள்ளது. அரசு மீது, லஞ்ச புகாரையும், தொடர்ந்து கூறி வருகிறார். இதனால், கமலை கைது செய்யும் நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என, திரையுலகினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விஷால் ஆதரவு :
விஷால் கூறுகையில், ''தமிழக அரசின் திரைப்பட விருதுகள் திரைத்துறையினருக்கு மிகுந்த ஊக்கமாக இருக்கும். நடிகர் கமல் ஒரு விஷயத்தில் இறங்கினால், அதுபற்றி முழுமையாக தெரிந்த பிறகே இறங்குவார். அதனால், 'பிக் பாஸ்' சர்ச்சை எல்லாம் ஒரு விஷயமே இல்லை. அவருக்கு ஒரு பிரச்னை என்றால், திரையுலகமே அவர் பின்னால் நிற்கும்,'' என்றார்.
Comments