அன்பழகன் வெளியேற்றம்: திமுக வெளிநடப்பு

சென்னை: தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக விவாதத்தின் போது, அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ., அன்பழகன் அமளியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை வெளியேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உத்தரவிட்டார். இதனை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், வெளியேற்றம் தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: பலமுறை எச்சரித்தும் அமளியில் ஈடுபட்டதால், ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டதாகவும், இன்று ஒரு நாள் மட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Comments