ஜூலை:ஜனாதிபதி தேர்தலை போலவே, துணை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடு வது என, காங்., தலைமையிலான, எதிர்க்கட்சி கூட்டணி முடிவு செய்துள்ளது. வேட்பாளர் யார் என்பது, நாளை நடக்க உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந் தெடுக்கும் தேர்தல், வரும், 17ல் நடக்கிறது. இதில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையி லான, தே.ஜ., கூட்டணி சார்பில், ராம்நாத் கோவிந்த்;காங்.,தலைமையிலான,அன்சாரியின்17 எதிர்க் கட்சிகள் கூட்டணி சார்பில், மீரா குமார் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி ஹமீது பதவிக் காலம், ஆக., 10ல் முடிவுக்கு வருவதால், புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், ஆக., 5ல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுக் கள் தாக்கல் செய்ய, ஜூலை, 18 கடைசி நாள்.
துணை ஜனாதிபதி தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா,எம்.பி.,க்கள் ஓட்டளிக்க உள்ளனர். மொத்தமுள்ள,790 பேரில், 550 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளதால்,பா.ஜ., நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும், தங்கள் ஒற்றுமையை காட்டுவதற் காக, 'துணை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடு வது' என, காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் உறுதியாக உள்ளன.
பார்லி., வளாகத்தில், காங்., தலைவர் சோனியா தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம், நாளை நடக்க உள்ளது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பரிசீலிக்கப் பட்ட, மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், மஹாத்மா காந்தியின் பேரனுமான, கோபால கிருஷ்ண காந்தி,அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோரின் பெயர்கள், துணை ஜனாதிபதி வேட்பாளருக்கான பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.
Comments