புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமனம்

ஜனாதிபதி,President,தமிழகம்,Tamil Nadu, கவர்னர், Governor, நியமனம், appointment,புதுடில்லி,New Delhi, தமிழகம், Tamil Nadu,ம.பி.,MP,மத்திய அரசு, Central Government,மஹாராஷ்டிர கவர்னர் வித்யாசாகர் ராவ்  , Maharashtra Governor Vidyasagar Rao, குஜராத் கவர்னர் ஓ.பி.கோஹ்லி,Gujarat Governor OP Kohli,புதுடில்லி: தமிழகம், ம.பி., உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு, இம்மாத இறுதிக்குள், நிரந்தர கவர்னர்களை நியமிக்கும் பணியில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ம.பி., தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், நீண்ட காலமாக கவர்னர் பதவி காலியாக உள்ளது.மற்ற மாநில கவர்னர்கள், கூடுதலாகஇந்த மாநிலங்களின் பொறுப்புகளை கவனித்து வருகின் றனர். இதனால், மாநில அரசின் வழக்கமான பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக, மஹாராஷ்டிர கவர்னர் வித்யாசாகர் ராவும், ம.பி., பொறுப்பு கவர்னராக, குஜராத் கவர்னர், ஓ.பி.கோஹ்லியும் உள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிந்து, வரும் 25ம் தேதி, புதிய ஜனாதிபதி பதவி யேற்றதும், இந்தமாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், கவர்னர்களாக நியமிக்கப்படலாம்.

மேலும், தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள வர்களிடம் இருந்து, அந்த பதவி பறிக்கப்பட்டு, அவர்களுக்கு கவர்னர் பதவி வழங்கப்படலாம். 

கவர்னர் பதவிக்கு தகுதியுடைய தலைவர் களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக வும், மத்திய அமைச்சரவையும் விரிவுபடுத்தப் படலாம் என்றும் அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Comments