
பெங்களூரு: பெங்களூரு, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் வினய்குமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை நடக்கும் என சித்தராமையா அறிவித்துள்ளார்.
Comments