மதுரை : டிஜிபி ராஜேந்திரனின் பணிநீட்டிப்பை எதிர்த்து கதிரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக டிஜிபி ராஜேந்திரன் மீது வருமான வரித்துறை குற்றம்சாட்டி உள்ளது. லஞ்ச ஒழிப்பு விசாரணை நிலுவையில் உள்ள போது பணி நீட்டிப்பு வழங்கியது சட்ட விரோதம் என கதிரேசன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, டிஜிபி பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தமிழக தலைமை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். ஆவணங்கள் அனைத்தும் சீலிடப்பட்ட கவரில் இருக்க வேண்டும். ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய முடியும். குட்கா பறிமுதல் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையையும் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கின் விசாரணை ஜூலை 12 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.மதுரை : டிஜிபி ராஜேந்திரனின் பணிநீட்டிப்பை எதிர்த்து கதிரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக டிஜிபி ராஜேந்திரன் மீது வருமான வரித்துறை குற்றம்சாட்டி உள்ளது. லஞ்ச ஒழிப்பு விசாரணை நிலுவையில் உள்ள போது பணி நீட்டிப்பு வழங்கியது சட்ட விரோதம் என கதிரேசன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, டிஜிபி பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தமிழக தலைமை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். ஆவணங்கள் அனைத்தும் சீலிடப்பட்ட கவரில் இருக்க வேண்டும். ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய முடியும். குட்கா பறிமுதல் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையையும் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கின் விசாரணை ஜூலை 12 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Comments