கட்சியினருக்கு எழுதி உள்ள கடிதத்தில்,அவர் கூறியுள்ளதாவது:
ஆடம்பரம், அலங்காரங்களை தவிர்த்து, எளிய முறையில் மக்களை சந்தித்து, அவர்களின், கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்பதே நமக்குள்ள முக்கிய பணி. மக்களுக்கு மனதளவில் எரிச்சலுாட்டும் செயல்களை தவிர்க்க வேண்டியது, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் கடமை.
காலில் விழக்கூடாது;
நிகழ்ச்சிகளில் பொன்னாடைக்கு பதில், புத்தகம் வழங்க வேண்டும் என, நான் விடுத்த கோரிக்கையை, அனைவரும் ஏற்றனர். அதேபோல, ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகை யில், அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாசாரத்தை, முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தேன்.
முழுமையாக தவிர்த்தால், கட்சி நடத்தும் விழா விபரம், பொது மக்களுக்கு தெரியாது என்பதால், விழா நடைபெறும் நேரம்மற்றும் இடத்தை சுட்டிக் காட்டும் வகையில், ஒரு சில இடங்களில், பொது மக்களுக்கு இடையூறின்றி, பேனர்களை வைக்க வேண்டும்.
அதை அலட்சியப்படுத்துவது போல், சில நிகழ்ச்சிகளில், பேனர் கலாசாரம் மீண்டும் தலை துாக்கியிருப்பது, வேதனை அளிக்கிறது. அதிக அளவில் பேனர் வைப்பது, சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் வகையில், பேனர் கலாசாரத்தை வளர்ப்பது, தலைமை யின் முடிவுக்கு எதிரானது. இந்த பேனர் கலா சாரத்தை கைவிட வேண்டும். இனியும் கட்சியி னர் யாரேனும், பேனர் கலாசாரத்தை கடைப் பிடித்தால், அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.என ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments