பேஸ்புக்:
சமூக வலைதளங்களின் பயன்பாடு இந்தியாவில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் என ஸ்மாட்போன்களில் மூழ்கி இருக்கும் இளம் தலைமுறையினர் அதிகம். இந்நிலையில், பேஸ்புக் சமூகவலைதளத்தில் அதன் பயனாளர்கள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
முதலிடம்:
உலக அளவில் 24.1 கோடி பயனாளர்களுடன் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா, பேஸ்புக் பயன்படுத்தும் நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா 24 கோடி பயனாளர்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இந்த காலகட்டத்தில் 2.6 கோடி பேர் மட்டுமே புதிதாக பேஸ்புக்கில் இணைந்துள்ளனர். இது ஜியோவுக்கே வெளிச்சம்.
Comments