'காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்காதீங்க!'

 'காமராஜர்,துறைமுகம், தனியார்,மயமாக்காதீங்க!',ஸ்டாலின்சென்னை:'எண்ணுார் காமராஜர் துறை முகத்தை, தனியார் மயமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துங்கள்' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரிக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தின் விபரம்: காமராஜர் துறைமுகத்தின், 16வது ஆண்டறிக்கை, 2016ல் வெளியானது. அதில், துறைமுகத்தை உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், மெகா துறைமுகமாக்கி, இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக தரம் உயர்த்தவேண்டும் என்பதை, 'விஷன்' எனவும்,சர்வதேச தரத்திற்கு துறைமுக சேவை வழங்க வேண்டும் என்பதை, 'மிஷன்' எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

ஆனால் தற்போது, காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பது, ஆண்ட றிக்கையில் குறிப்பிட்டதற்கு மாறாக உள்ளது. மத்தியஅரசிடமிருக்கும், ௧௦௦ சதவீத பங்குகளை விற்று, காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த, தாங்கள் 
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
.
நாட்டின் வளர்ச்சி மற்றும் மாநில வளர்ச்சிக்காக காமராஜர் துறைமுகம், அதற்கு நிர்ணயிக்கப் பட்டஇலக்கை அடைய அனுமதிக்க வேண்டும். இது குறித்த நல்ல பதிலை அளிப்பீர்கள் என, தமிழக மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின் றனர்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments