
புதுடில்லி: அவமதிப்பு வழக்கில் மல்லையா இல்லாமல் விசாரணை நடத்த இயலாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். பல முறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மல்லையா இல்லாமல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க முடியாது. அவர் இல்லாமல் வழக்கு விசாரணை நடத்த முடியாது எனக்கூறினார்.அட்டர்னி ஜெனரல் கூறுகையில், மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு டிசம்பர் 4க்குள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
Comments