ஒரே நாள் இரவில் விவசாயிகள் பிரச்னையை தீர்க்க முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

விவசாயிகள் பிரச்னை, உச்சநீதிமன்றம், வேணுகோபால்புதுடில்லி: விவசாயிகளின் பிரச்னையை ஒரே நாள் இரவில் தீர்த்து விட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.விவசாயிகள் தற்கொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் பொது நல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கேஹர், சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

கால அவகாசம்:

அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், விவசாயிகளின் நலன்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் உரிய பலன்கள் கிடைக்க மத்திய அரசுக்கு போதுமான அவகாசம் வழங்க வேண்டும். 12 கோடி விவசாயிகளில், 5.34 கோடி விவசாயிகள், பைசல் பிமா யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் இணைந்துள்ளனர். பயிர் காப்பீட்டு திட்டத்தில் 30 சதவீத நிலங்கள் இணைந்துள்ளன. 2018 ம் ஆண்டிற்குள் இது அதிகரிக்கும் எனக்கூறினார்,

பரிசீலனை:

பின்னர் நீதிபதிகள் கூறுகையில்,அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை பிரச்னையை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது. போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்ற மத்திய அரசு வழக்கறிஞரின் வாதம் ஏற்க கூடியாது. இதனால், மத்திய அரசுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பிரச்னை குறித்து, வழக்கை தொடர்ந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் கருத்தையும் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறினர். தொடர்ந்து வழக்கை ஒத்திவைத்தனர்.

புதுடில்லி: விவசாயிகளின் பிரச்னையை ஒரே நாள் இரவில் தீர்த்து விட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.விவசாயிகள் தற்கொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் பொது நல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கேஹர், சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. கால அவகாசம்: அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், விவசாயிகளின் நலன்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் உரிய பலன்கள் கிடைக்க மத்திய அரசுக்கு போதுமான அவகாசம் வழங்க வேண்டும். 12 கோடி விவசாயிகளில், 5.34 கோடி விவசாயிகள், பைசல் பிமா யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் இணைந்துள்ளனர். பயிர் காப்பீட்டு திட்டத்தில் 30 சதவீத நிலங்கள் இணைந்துள்ளன. 2018 ம் ஆண்டிற்குள் இது அதிகரிக்கும் எனக்கூறினார், பரிசீலனை: பின்னர் நீதிபதிகள் கூறுகையில்,அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை பிரச்னையை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது. போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்ற மத்திய அரசு வழக்கறிஞரின் வாதம் ஏற்க கூடியாது. இதனால், மத்திய அரசுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பிரச்னை குறித்து, வழக்கை தொடர்ந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் கருத்தையும் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறினர். தொடர்ந்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Comments