இவ்வழக்கு, வரும், 11ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வில் ஏற்பட்ட பிரச்னைகளால், முதல்வர் பதவியில் இருந்து விலகினார், பன்னீர்செல்வம். சசிகலா அணி சார்பில், பழனிசாமி முதல்வராக நியமிக்கப் பட்டார். அதனால், அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்தது.
கூவத்துார் விடுதி:
'சட்டசபையில், பிப்., 18ல், நம்பிக்கை தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டும்' என, பழனிசாமி அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 100க் கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க் களை, சசிகலா தரப்பினர், சென்னையை அடுத்த, கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைத்த தாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், பிப்.,18ல், நம்பிக்கை ஓட்டெ டுப்பு நடந்தபோது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, பன்னீர்செல்வம் தரப்பினரும், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும் வலியுறுத்தின. ஆனால், குரல் ஓட்டெடுப்பில், பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில் கர் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்கள், கோபால் சுப்ரமணியன், சுனில் பெர்னாண்டஸ்ஆகியோர் வாதிட்டதாவது: பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப் பின் போது,ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. எம்.எல். ஏ.,க் கள் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
ரகசிய ஓட்டெடுப்பு
ஆனால், அதை ஏற்காமல், சபாநாயகர் தனபால், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த அனுமதி மறுத்தார்.இது, ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளுக்கு எதிராகவும், நேர்மை யாகவும், வெளிப்படையாகவும் ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது.
அதனால், பிப்., 18ல் நடந்த நம்பிக்கை ஓட்டெ டுப்பு செல்லாது என,அறிவிக்க வேண்டும். புதிதாக, ரகசிய ஓட்டெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும், சுதந்திர மான, எந்தத் தரப்பையும் சாராதவர் கண் காணிப்பில், இந்த ரகசிய ஓட்டெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
அதை தொடர்ந்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கூறியுள்ள அமர்வு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரலின் உதவியை கோரி உள்ளது. வழக்கின் விசாரணை, வரும், 11க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
Comments