சசிக்கு சலுகையா? விசாரணைக்கு சித்தராமையா உத்தரவு

பெங்களூரு சிறை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, சலுகை, சசிகலாபெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக உயர் மட்டக்குழு விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா புகார் கூறினார். இதனை டிஜிபி மறுத்தார்.இந்நிலையில், இது குறித்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும், புகார் குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும், விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Comments