துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளர் வெங்கைய்ய நாயுடு

துணை ஜனாதிபதி ,தேர்தல், வெங்கைய்யபுதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் இன்று முடிந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக வெங்கைய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ. பார்லிமென்ட் போர்டு கூட்டம் பா,ஜ. தலைமையில் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடந்தது. இதையடுத்து துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கைய்ய நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக காங். தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக வெங்கைய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். வெங்கைய்ய நாயடு தற்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார்.

Comments