செல்பி மோகத்தால் இந்தியர்கள் தான் அதிகம் உயிரை விடுகிறார்கள்

செல்பி, இந்தியர்கள், உயிரிழப்புக்கள்புதுடில்லி : உலக அளவில் செல்பி மோகம் அனைத்து வயதினரிடமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ஆபத்தான இடங்களில் இருந்து செல்பி எடுக்கச் சென்று உயிரை விடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.2013 ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி வெளியிட்டுள்ள அந்த ஆண்டிற்கான வார்த்தை, செல்பி என அறிவித்துள்ளது. 

இந்நிலையில் உலக அளவில் செல்பி மோகத்தால் அதிக உயிரிழப்புக்கள் நடக்கும் நாடுகள் குறித்து கர்னிகியா மெல்லன் பல்கலை மற்றும் டில்லி இந்திரபிரஷ்தா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் ஆகியன இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின. 
அதில், மற்ற நாட்டினரை விட செல்பி மோகத்தால் அதிகம் உயிரிழப்பவர்கள் இந்தியர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. 2014 மார்ச் முதல் 2016 செப்டம்பர் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலக அளவில் செல்பி எடுக்க போய் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.இது குறித்து மனோதத்துவ நிபுணர் சல்மா பிரபு கூறுகையில், இது அதீத பைத்தியகாரத்தனம். இது இளைஞர்களிடம் மட்டுமல்ல பெரியவர்களிடமும் உள்ளது. த்ரில் உணர்விற்காக ஆபத்தான இடங்களில் இருந்தும் செல்பி எடுத்து அதனை உடனடியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். அதற்கு அதிக லைக்குகள் வர வேண்டும், அதிகமானவர்கள் பார்க்க வேண்டும், கருத்துக்கள் பதிவிட வேண்டும் என்ற எண்ணம். இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்தாலும் அதிலிருந்து வெளியே வர அவர்கள் விரும்புவதில்லை என்றார்.புதுடில்லி : உலக அளவில் செல்பி மோகம் அனைத்து வயதினரிடமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ஆபத்தான இடங்களில் இருந்து செல்பி எடுக்கச் சென்று உயிரை விடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.2013 ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி வெளியிட்டுள்ள அந்த ஆண்டிற்கான வார்த்தை, செல்பி என அறிவித்துள்ளது. இந்நிலையில் உலக அளவில் செல்பி மோகத்தால் அதிக உயிரிழப்புக்கள் நடக்கும் நாடுகள் குறித்து கர்னிகியா மெல்லன் பல்கலை மற்றும் டில்லி இந்திரபிரஷ்தா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் ஆகியன இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின. அதில், மற்ற நாட்டினரை விட செல்பி மோகத்தால் அதிகம் உயிரிழப்பவர்கள் இந்தியர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. 2014 மார்ச் முதல் 2016 செப்டம்பர் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலக அளவில் செல்பி எடுக்க போய் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.இது குறித்து மனோதத்துவ நிபுணர் சல்மா பிரபு கூறுகையில், இது அதீத பைத்தியகாரத்தனம். இது இளைஞர்களிடம் மட்டுமல்ல பெரியவர்களிடமும் உள்ளது. த்ரில் உணர்விற்காக ஆபத்தான இடங்களில் இருந்தும் செல்பி எடுத்து அதனை உடனடியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். அதற்கு அதிக லைக்குகள் வர வேண்டும், அதிகமானவர்கள் பார்க்க வேண்டும், கருத்துக்கள் பதிவிட வேண்டும் என்ற எண்ணம். இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்தாலும் அதிலிருந்து வெளியே வர அவர்கள் விரும்புவதில்லை என்றார்.

Comments