அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கோர்ட் வாய்ப்பூட்டு

ராஜேந்திரபாலாஜி,Rajendra Palaji, கோர்ட்,Court, தனியார் பால்,Private Milk,  சென்னை,Chennai,  மே, May,   பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ,milk Department minister Rajendra Balaji, ஹட்சன் ,Hudson, டோட்லா,Todla, விஜய் பால் ,Vijay Paul,விற்பனை, Sales,சென்னை : மே மாதம் 24 ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில் , தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலில் வேதிக்கலப்படம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஹட்சன் , டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. அமைச்சர் பேச்சால் விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதனால் அமைச்சர் ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த கோர்ட் , தனியார் பால் நிறுவனங்கள் குறித்து ஆதாரம் இன்றி விமர்சிப்பதை அமைச்சர் நிறுத்த வேண்டும் என தடை விதித்தது. மேலும் தனியார் பால் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Comments