நாக்பூர்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி, இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை அடித்து உதைத்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் கடோல் நகரை சேர்ந்தவர் சலீம் இஸ்மாயில் ஷேக் என்பவர் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கும்பல், அவரை இரு சக்கர வாகனத்தில் இறங்க சொல்லி, வாகனத்தில் இறைச்சி உள்ளதா என காட்டுமாறு கூறியுள்ளது. இதற்கு இஸ்மாயில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த கும்பல், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து மர்ம கும்பலை போலீசார் கைது செய்தனர்.
Comments