அரசு பஸ்களில், படுக்கை, வைஃபை, கழிவறை, சிசிடிவி கேமரா.. அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட விஜயபாஸ்கர்

The night long buses will have sleeper coaches assures Minister Vijaya Bhaskar சென்னை: அரசு பஸ்களில் வைஃபை வசதி, படுக்கை வசதி, சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பல வசதிகள் அமைத்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று விஜயபாஸ்கர் வெளியிட்ட போக்குவரத்துத்துறை அறிவிப்புகளில் முக்கியமானவை: நீண்டதூரம் பயணிக்கும் அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கழிப்பறை வசதி எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் இரவு நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் போக்குவரத்து கழக பணிமனைகளில் ஏடிஎம் வசதி செய்து தரப்படும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த சிசிடிவி பொருத்தப்படும்.

Comments