கதிராமங்கலத்தில் மீண்டும் கடையடைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயி்ல் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து இரண்டு நாட்களாக அங்கு கடையடைப்பு செய்தனர்.. போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று(ஜூலை 4) தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதனால், போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதனால், கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் எனக்கூறி மீண்டும் கடைகளை அடைத்தனர்.

Comments