விமான நிலையத்தில் கூட்டம் நடத்திய அமித்ஷா ; வழக்கு பதிவு செய்ய காங்., வலியுறுத்தல்

விமான நிலையம், கூட்டம்,Congress,காங்கிரஸ், பா.ஜ.க.,பனாஜி: கோவா விமான நிலையத்தில் பா.ஜ., கூட்டம் நடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நேற்று கோவா சென்ற அமித்ஷாவுக்கு அங்குள்ள விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். 

இது தொடர்பாக மாநில காங்., செயலர்களில் ஒருவரான கிரிஷ் கோயங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விமான நிலைய வளாகத்தில் பா.ஜ., கூட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.,வினர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிய வேண்டும். மேலும் விழாவில் பங்கேற்ற அமித்ஷா மற்றும் கட்சி நிர்வாகிகள், துணைபோன விமான நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். இவ்வாறு கிரிஷ் கூறியுள்ளார்.

Comments