இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு என்றோ வந்து விட்டேன். துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும். நான் அரசியலுக்கு வந்து விட்டதை அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜா ஆகியோர் உணர வில்லை. வரி ஏய்ப்பபு நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுவது கோபத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது. இந்திதிணிப்பு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன். இது டிஜிட்டல் யுகம் என்பதால் அரசுத்துறை ஊழல் குறித்த தகவல்களை மக்களே www.tn.gov.in/ministerslist -ல் அனுப்பலாம் .ஊரெல்லாம் கேட்ட ஊழல் ஓலம் மறைந்திருந்தால் நினைவுபடுத்த மக்கள் இருக்கிறார்கள்.அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை அந்தந்த துறைகளுக்கு புகார் அனுப்புங்கள். எல்லா துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள் . என்துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவிற்கு வரி விலக்கு கேட்ட என்னைப்போன்ற ஒரு சிலரை தவிர மற்றவர்கள் லஞ்சத்திற்குஉடந்தையாகி உள்ளனர் .கேள்வி கேட்டவர்களை கைது செய்யும் அளவிற்கு தென்னகத்தில் சிறைகள் இல்லை. இவ்வாறு கமல் கூறி உள்ளார்.
Comments