தினகரன் வழக்கில் மேல் முறையீடு

தினகரன், அமலாக்க துறை, அன்னிய செலவாணி மோசடி, தடை, சென்னை, உயர்நீதிமன்றம்சென்னை: தினகரன் மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து அமலாக்க துறை மேல் முறையீடு செய்துள்ளது.

21 ஆண்டுகளாக விசாரணை

தினகரன் மீது, ஜெ.ஜெ.,'டிவி'க்கு உபகரணங்கள் வாடகைக்கு வாங்கியது தொடர்பாக, அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்க துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. இதை எதிர்த்து அமலாக்க துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதற்கான மனுவில், கடந்த 21 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தினகரனுக்கு பல அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு தடை விதித்தால், வழக்கு பின்னோக்கி போய்விடும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவின் மீதான உத்தரவை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Comments