கடந்த 2016 அக்., 24 வுடன் உள்ளாட்சி பிரநிதிகளின் பதவிகாலம் முடிவடைந்தது. தேர்தலுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றமே, 'எப்போது நடத்துவீர்கள்' என, தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. அ.தி.மு.க., இரு அணியாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
தற்போது சசிகலா அணியும் பழனிசாமி, தினகரன் அணி என, மேலும் இரண்டாக உடைந்தது. இது தி.மு.க.,--காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு சாதகமாக உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சிக்கு தோல்வியே கிடக்கும் என கருத்து நிலவுகிறது.
நீதிமன்ற நெருக்கடியால், கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முடிவு செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து மூத்த அமைச்சர்கள், உளவுதுறை அதிகாரி களிடம் முதல்வர் பழனிசாமி ஆலோசனையும் நடத்தினார். மாவட்ட வாரியாக உளவுத்துறை அறிக்கையும் பெறப்பட்டது.
அதில், 'அ.தி.மு.க.,வில் பல அணிகள் இருப்பதால் வெற்றி, தோல்வியை விட சட்டம், ஒழுங்கு பிரச்னையை சமாளிப்பது சிரமம். இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தான் வார்டுகளின் எல்லை வரை யறையை செய்ய ஆணையம் அமைக்கும் திட்டத்தை ஆளுங் கட்சி கையில் எடுத்துள்ளது. ஆணையத்தின் காலத்தை நீட்டிப்பு செய்து கொண்டே நாட்களை ஓட்டி விடலாம் என ஆளுங்கட்சி முடிவு செய்துள்ளது.அதற்குள் இரு அணிகளையும் இணைக்கும் பொறுப்பு, ஒரு தொழிலதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.
Comments