
புதுடில்லி: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டில்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் இன்று (ஜூலை 14) குற்றப்பத்திரிககை தாக்கல் செய்யப்பட்டது. சுகேஷ் மற்றும் ஹவாலா தரகர் சந்திரசேகர் பெயர் மட்டுமே குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ளது. வழக்கு விசாரணை வரும் 17 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கிலிருந்து தினகரன் விடுவிக்கப்பட இருப்பதாக காலை செய்தி வெளியானது.
போலீஸ் கமிஷனர் விளக்கம்
இந்நிலையில், டில்லி குற்றப்பிரிவு இணை கமிஷனர் பிரவீன் ரஞ்சன் கூறுகையில், இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. குற்றப்பத்திரிகை முடிவடைந்து விட்டடதாகவும் , தினகரன் மீது புகாரில்லை எனவும் கூற முடியாது. வழக்கில் தினகரன் வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Comments