கமல் வந்தால் களத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம்: ஓ.எஸ்.மணியன்

கமலை,சந்திக்க,தயாரக,உள்ளோம்,மணியன் சென்னை: நடிகர் கமலை களத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் மணியன் தெரிவித்துள்ளார். தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்க தயாராக உள்ளோம். மேலும்அவரை அரசியல் களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம். தமிழக அரசில் ஊழல் இருப்பது உண்மையானால் குற்றம் சாட்டும் கமல் அதனை நிரூபிக்கட்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments