
ஊட்டி: மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த கணக்காளர் இன்று மர்ம முறையில் இறந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிரவமாக விசாரித்து வருகின்றனர்.கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இது வரை போலீசார் 10 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் மற்றும் சயான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கினர். இதில் கனகராஜ் இறந்து போனார்.
இந்நிலையில் இந்த எஸ்டேட்டில் கணக்காளராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் 28. இவரது இல்லத்தில் திடீரென இறந்துள்ளார். இந்த சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர். தினேஷ், அவரது இல்லத்தில் துாக்கில் தொங்கி பிணமாக கிடந்ததாக கூறப்படுகிறது.
Comments