தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர். கைதான 10 பேரும் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தஞ்சாவூர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கதிராமங்கலம் மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்று கொண்டனர். போராட்டத்தை கைவிடாவிட்டால், ஜாமின் மனு நிராகரிக்கப்படும் எனக்கருதி அப்பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.
Comments