
பெங்களூரு : சிறைத்துறை டிஜிபி.,யாக இருந்த ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகள் மிகப் பெரிய அளவில் நடத்தும் இந்த போராட்டத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு காணப்படுகிறது.சிறை சூப்பிரண்ட் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரூபா இடம் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் கைதிகள் கோஷங்கள் எழுப்பினர்.இதற்கிடையில் , சூப்பிரடண்ட் சிறைத்துறை எஸ்.பி., கிருஷ்ணகுமாரும் இன்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments