பார்லிமென்ட் தொடர் நாளை(ஜூலை 17) துவங்க உள்ளது. இதனையடுத்து டில்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி நிர்கவாகிள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பேசுகையில் : பசுக்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அதே நேரத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறை செயல்களை அனுமதிக்க முடியாது. இவர்கள் தங்களின் கையில் சட்டத்ததை எடுக்க கூடாது. சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும். வன்செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மோடி கேட்டுக்கொண்டார்.
Comments