கூகிள் இண்டர்நெட் உலகில் அடுத்து வரும் 100 கோடி வாடிக்கையாளர்களுக்காக அதுவும் பிரத்தியேகமாக இந்தியாவிற்கு மிகவும் உதவும் ஒரு பிராடெக்ட்-ஐ உருவாக்க கூகிள் நிறுவனத்துடன் இணைய உள்ளது ஹல்லி லேப்ஸ். இவ்வாறு தெரிவித்த கூகிள் செய்தி தொடர்பாளர், இந்நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான தொகையை வெளியிடவில்லை.
பங்கஜ் குப்தா இந்திய சந்தையில் ஏர்பிஎன்பி நிறுவனத்திற்குப் போட்டியாக விளங்கும் ஸ்டேசில்லா நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பங்கஜ் குப்தா 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஹல்லி லேப்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனத்தைச் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டது மே 22ஆம் தேதி. பங்கஜ் குப்தா ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சயின்ஸ் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றவர்.
கேசர் சென்குப்தா இந்நிலையில் தான் கூகிள் நிறுவனத்தின் துணை தலைவரான கேசர் சென்குப்தா, பங்கஜ் மற்றும் ஹல்லி லேப்ஸ்-இல் இருக்கும் அவரது அணி கூகிள் நிறுவனத்தில் புதிதாகத் தயாரிப்போம் என அழைப்பு விடுத்தார்.
கிராமம் புதுமையான மெஷின் லேர்னிங் டெக்னிக்கை பயன்படுத்தி மோசமான இண்டர்நெட் தளத்தில் முழுமையான தகவல்களைக் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதை மையமாகக் கொண்டு ஹல்லி லேப்ஸ் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இந்தக் கனவுடன் தான் ஹல்லி லேப்ஸ் நிறுவனமும் உருவானது.
பெரிய சந்தை கூகிள், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் போன்ற சர்வதேச இண்டர்நெட் நிறுவனங்களுக்கு இந்தியா பெரிய சந்தை. இந்திய சந்தையை முழுமையாக அடைவதே இந்த நிறுவனங்களின் முக்கியக் கனவாகும்.
பேஸ்புக் அந்த வகையில் 2014ஆம் ஆண்டுப் பேஸ்புக் நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் இருந்து லிட்டில் ஐ லேப்ஸ் என்ற நிறுவனத்தைக் கைப்பற்றியது.
டிவிட்டர் அதேபோல் டிவிட்டர் நிறுவனம் ஜிப்டைல் என்ற நிறுவனத்தையும் கைப்பற்றியது, இந்நிறுவனம் மக்கள் கொடுக்கும் மிஸ்டு கால் மூலம் எப்படி வர்த்தகம் செய்வது என்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளது.
ஆப்பிள் 2016ஆம் ஆண்டின் கடைசியில் ஆப்பிள் நிறுவனம் ஹைதராபாத் நகரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் டூலிப்ஜம்ப் நிறுவனத்தைக் கைப்பற்றியது. தற்போது கூகிள் நிறுவனமும் முதல் முறையாக இந்திய நிறுவனத்தைக் கைப்பற்றி இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
Comments