
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.பி.,க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு எம்.பி., எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு கோரினார்.அப்போது பேசிய பா.ஜ., மூத்த தலைவர் முரளிதர ராவ், ராம்நாத்துக்கு ஓ.பி.எஸ்., நிபந்தனையின்றி ஆதரவு அளித்துள்ளதாக கூறினார்.பின்னர் ஓ.பி.எஸ்., அளித்த பேட்டி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு கேட்டு ராம்நாத் வந்தார். அனைவரும் ஒரு மனதாக ஒருமித்த கருத்தோடு முழு ஆதரவையும் தருகிறோம் என உறுதியளித்துள்ளோம். எந்த நிபந்தனையும் இல்லாமல், ஒரு மித்த கருத்தோடு ஆதரவு தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசிய ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் பழனிசாமியையும் சந்திக்க உள்ளார்.
Comments