எனினும் மக்களை சமாதானப்படுத்த ஜிஎஸ்டியால் இந்தியா வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்பது போன்ற மாயதோற்றத்தை பாஜக அரசு உருவாக்கிவிட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் ஜிஎஸ்டியின் உண்மை முகம் குறித்து நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹோட்டல்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்தும், உணவு பொருள்களின் விலை அதிகரிப்பு குறித்தும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு அரசு எந்த வரிவிதிப்பையும் விதிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவ்வளவுதான் இப்போது நெட்டிசன்களிடம் வறுபடுகிறார்.
Comments