டம்மியாகும் டிடிவி தினகரன்.. அதிமுகவை வழிநடத்த ஓபிஎஸ் தலைமையில் 7 பேர் குழு.. எடப்பாடிக்கும் ஓ.கே.

7 people has been set up to lead the AIADMK under O.Pannerselvamசென்னை: அதிமுகவை வழிநடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி நடுவே இணைப்பு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது. ஆனால் இரு அணிகள் இணைய உறுதியாக உள்ளன. எனவே, அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று முதல்வர் அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்தார்.

குழுக்கள் கலைக்கப்பட்டாலும் இணைப்பு பேச்சுவார்த்தை தொடருகிறது. ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தனர் என்றார் அவர். இதனிடையே, கட்சியை வழிநடத்த இரு அணிகளை சேர்ந்த எழுவர் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். குழுவின் தலைவராக ஓபிஎஸ் செயல்படுவார் என்றும், வழிநடத்தும் குழுவின் துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியின் 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால், எடப்பாடியே முதல்வராக தொடரலாமாம். அதிமுக தலைமை பதவிக்கு ஈடான பதவி இந்த குழு தலைவர் பதவி. எனவே டிடிவி தினகரன் டம்மி செய்யப்படுவதாக தெரிகிறது.

Comments