வழக்கு:
கடந்த 2016 மே மாதம் தமிழக சட்டசபையின் போது திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே 3 கன்டெய்னர்களில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. தொடர்ந்து, இந்த பணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உரிமை கோரியது. இது குறித்து திமுக தொடர்ந்த வழக்கை ஏற்று சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறிக்கை:
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், திருப்பூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டது வங்கிப்பணம். கோவையிலிருந்து ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்டது எனக்கூறியுள்ளது.
இது தொடர்பாக வழக்கை தொடர்ந்த திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், மேலிட உத்தரவின் பேரில் இந்த பணம் வங்கிப்பணம் என சி.பி.ஐ., கூறியிருக்க வேண்டும். இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி அலட்சியமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments