'பாரத மக்கள் மருந்தக வளர் திட்டத்ததை' மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும் 110 இடங்களில் 'மக்கள் மருந்தகம்' துவக்கப்படும். மருந்தகம் நடத்த அனுமதி பெற்ற மருந்தாளுனர்களுக்கு, காந்திகிராம பல்கலையில் பயிற்சி அளிக்கப்பட்டது. காந்திகிராமத்திலும் மக்கள் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது.
''இம்மாத இறுதிக்குள் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும்,'' என, பல்கலை துணைவேந்தர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
Comments