நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிரான வழக்கு : ஜூலை 11ல் விசாரணை

நம்பிக்கை ஓட்டெடுப்பு, சுப்ரீம் கோர்ட், மாபா பாண்டியராஜன்
புதுடில்லி : தமிழக சட்டசபையில் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது பிப்ரவரி 18 ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இன்று முதல் முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழக்கின் விசாரணை ஜூலை 11 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடர்பான வழக்கில் சட்ட உதவிக்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், ஜூலை 11 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நம்பிக்கை ஓட்டெடுப்பை ரகசியமான முறையில் நடத்த சட்டத்தில் இடமில்லையா எனவும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

Comments