முதல் ஓட்டு போட்டவருக்கு வயது 100 !

இமாச்சல பிரதேசம்,Himachal Pradesh, முதல் ஓட்டு, first voting,  முதல் பொதுத்தேர்தல்,first general election, பனிப்பொழிவு,snowfall, சிம்லா, Shimla, சுதந்திர இந்தியா,Independent India, சியாம் சரண் நெகி,Siam Saran Negi, லோக்சபா தேர்தல்,Lok Sabha election, தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா, Election Commissioner Naveen Chawla,சிம்லா: சுதந்திர இந்தியாவில், நடந்த முதல் தேர்தலில் முதல் ஓட்டு போட்டவருக்கு இப்போது வயது, 100. இந்த நிகழ்வை ஒரு கிராமமே கொண்டாடுகிறது.

1917 ம் ஆண்டு பிறந்தவர்

இமாச்சல பிரதேசம், கின்னாவுர் மாவட்டம், சினி என்ற பகுதியில், 1917 ம் ஆண்டு ஜூலை, 1ம் தேதி பிறந்தவர் சியாம் சரண் நெகி. சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் 1951ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் நடந்தது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் அப்போது பனிப்பொழிவு காலம் என்பதால், சினி உட்பட சில பகுதிகளில் முன்கூட்டியே ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் முதல் ஓட்டு போட்டவர் தான் இந்த நெகி. இவர் இதுவரை, 16 லோக்சபா தேர்தல்களிலும், 12 சட்டசபை தேர்தல்களிலும் ஓட்டு போட்டுள்ளார். கடந்த, 2014ம் ஆண்டு அப்போது தலைமை தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா, கின்னாவுர் பகுதிக்கு நேரில் சென்று நெகியை பார்த்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நடந்த லோக்சபா தேர்தலின் விளம்பர தூதராக நெகி நியமிக்கப்பட்டார்.

மனைவிக்கு வயது 96

இந்த சூழ்நிலையில் தற்போது நெகிக்கு 100 வயதாகிறது. இந்த நிகழ்வை அவரது சொந்த ஊரான சினி கிராம மக்கள் பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அவரது மனைவி ஹிராமணிக்கு, 96 வயதாகிறது. இந்த தம்பதிக்கு ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். நெகி கூறுகையில், '' முதல் முறையாக ஓட்டு போட்டதை இன்னும் நினைவில் வைத்துள்ளேன். அப்போது முதல் இதுவரை இந்நாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன,'' என்றார்.

Comments