என்னை ஒதுங்க சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை: தினகரன்

பெங்களூரு: '' கட்சியில் இருந்து, என்னை ஒதுங்க சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை,'' என, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பிறகு தினகரன் கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறை முன், நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது:

கட்சியில் என்னை ஒதுங்க சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. அமைச்சர்கள் பயத்துடன் உள்ளனர். அவர்களுக்கு யாரிடம் பயம் என்பது விரைவில் தெரியும். வானளாவிய அதிகாரம் படைத்த அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கூறுவது சரியல்லை.

சசிகலாவுடன் ஆலோசனை

என்னிடம் தொண்டர்கள் பல கருத்துக்களை கூறினர். அது குறித்து சசிகலாவிடம் ஆலோசனை செய்தேன். அவர் பல அறிவுரைகளை கூறினார். இரண்டு அணிகளும் இணைய கடந்த 45 நாட்களாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், 60 நாட்கள் வாய்ப்பு கொடுப்போம் என சசிகலா கூறியுள்ளார். அதுபடி செயல்படுவோம். இவ்வாறு தினகரன் கூறினார்.

Comments