முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் அவசர ஆலோசனை

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில், நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட 19 அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர்களின் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பிறகு அமைச்சர்கள் 19 பேரும் தலைமை செயல்கத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசி வருகின்றனர். முதல்வருடனான இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்க தினகரன் சென்றுள்ள நிலையில் அமைச்சர்கள் ஆலோசனை மற்றும் முதல்வருடன் நடக்கும் ஆலோசனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Comments