கத்தார் உறவு பாதிக்காது:சுஷ்மா

புதுடில்லி : டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம், கத்தார் உடனான உறவை 4 நாடுகள் முறித்திருப்பது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய சுஷ்மா, அது வளைகுடா நாடுகள் கூட்டமைப்பு பிரச்னை. நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை. வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இதனால் இந்தியா - கத்தார் இடையேயான உறவு. ஒப்பந்தம் எதிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 80,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments