தமிழகத்தில் ஆட்சி நீடிக்குமா? ஸ்டாலின்

ஈரோடு: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி: ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, அதிமுக ஒரணியாக இருந்தது. அவர் மறைவுக்கு பின் இரு அணியாக மாறி, தற்போது 3 அணியாக உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் எத்தனை அணியாக மாறும் என தெரியவில்லை. சட்டசபை கூடும் வரை ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம் உள்ளது. சட்டசபை கூடும் போது, தி.மு.க., மக்கள் ஜனநாயக கடமையாற்றும்.ஜெயலலிதா படம் அறையில் இருக்கும்போது, முதல்வர் பழனிசாமி படம் இருப்பது பெரிதல்ல. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நதிநீர் இணைப்பு பணியை அதிமுக அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் அளித்த போட்டியில், மக்கள் பிரச்னை குறித்து வாய் திறக்காத முதல்வர் தனது சுயநலத்துக்காக 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உள்ளார் என்றார்.

Comments