தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை : வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாக இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

Comments