நான் 61 வயது இளைஞன்:ஸ்டாலினுக்கு பொன்.ராதா பதில்

நெல்லை : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞர் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், நான் 16 வயது இளைஞன் அல்ல. 61 வயது இளைஞன். வயதானதை மறைக்க நினைத்திருந்தால் தலைக்கு டை அடித்திருப்பேன். காவிரி உரிமையை தமிழக இழந்ததற்கு 200 சதவீதம் திமுக தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

Comments